மிகவும் சிறப்பு வாய்ந்த பயணம்..!- முதலமைச்சர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து விமான பணிப்பெண் நெகிழ்ச்சி

டெல்லியில் இருந்து முதலமைச்சர் விஜய் நேற்று சென்னை திரும்பினார்.
மிகவும் சிறப்பு வாய்ந்த பயணம்..!- முதலமைச்சர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து விமான பணிப்பெண் நெகிழ்ச்சி
Published on

முதலமைச்சர் விஜய் அரசுமுறை பயணமாக 2 நாள் டெல்லி சென்று வந்தார். அவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து மத்​திய உள்​துறை அமைச்சர் அமித் ஷாவை விஜய் சந்​திப்​ப​தாக இருந்​தது.

ஆனால், கடைசி நேரத்​தில் அந்த சந்​திப்பு நடை​பெற​வில்​லை. அதையடுத்து விஜய் மத்​திய நிதி​ அமைச்சர் நிர்​மலா சீதா​ராமனை சந்​தித்து பேசினார்.

பின்னர் நேற்று முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பினார். இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் டெல்லியில் இருந்து மீண்டும் சென்னை திரும்பும்போது, அவருடன் விமான பணிப்பெண் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உமா மீனாட்சி என்ற அந்த விமானப் பணிப்பெண், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால், இந்த விமானப் பயணம் “மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று குறிப்பிட்டு அந்தப் படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் விஜய்யின் தற்போது தனது அடையாளமாக மாறியுள்ள கருப்பு-வெள்ளை கோட் உடையில் முதலமைச்சர் விஜய் மிகவும் இயல்பாக காணப்படுகிறார். இந்தப் படம் ரசிகர் பக்கங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் வேகமாகப் பரவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com