திமுக-வை பாஜக பக்கம் இழுத்துச் செல்கிறாரா ஆ.ராசா?: அமைச்சர் வன்னியரசு கேள்வி

திராவிட கொள்கைகளை திடமாக பேசி வரும் இயக்கம் விசிக மற்றும் இடது சாரி கட்சிகள். எங்களை விமர்சிப்பது மற்றும் அவதூறு செய்வதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்?.
ஆ. ராசா- அமைச்சர் வன்னி அரசு
ஆ. ராசா- அமைச்சர் வன்னி அரசு
Published on

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது அண்ணாவும், ராஜாஜியும் இருந்த சட்டமன்றத்தில் நாதாரித் தலைவர்களெல்லாம் இன்று முதலமைச்சராக இருந்து கொண்டு.., எங்கள் தலைவனை ஒரு தேர்தலை வைத்து எடை போடுவீங்களா?.

கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ஒருவர் திமுக கூட்டணியே இல்லை என்கிறார். திமுக கூட்டணியில் அவர்கள் இல்லை என்று சொல்ல உரிமை இருக்கிறது. திமுக கூட்டணி இல்லை என சொல்ல என்ன உரிமை இருக்கிறது. என்ன அதிகாரம் இருக்கு?. எதுக்கு இந்த அதிசபிரசிங்கித்தனம். எங்கள் கூட்டணியில் இன்னும் 60 இயக்கங்கள் இருக்கிறது என்றார்.

மேலும், த.வெ.க.-வுக்கு ஆதரவு கொடுத்த விசிக, கம்யூனிஸ்டு கட்சிகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆ.ராசா முதலமைச்சர் குறித்து விமர்சித்து தொடர்பாக அமைச்சர் வன்னி அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வன்னியரசு அளித்த பதில் பின்வருமாறு:-

தோல்வி ஏற்பட்டதில் இருந்து ஆ.ராசா, மன உளைச்சலில் ஏராளமான உளறுதல்களை செய்து வருகிறார். அவர் விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் மீது தாக்குதல் நடத்துவன் மூலமாக திமுக என்ற பேரியக்கத்தை பாஜகவோடு அல்லது பாஜக பாதையில் இழுத்துச் செல்கிறாரோ? என்ற ஐயம் நிலவுகிறது.

திராவிட கொள்கைகளை திடமாக பேசி வரும் இயக்கம் விசிக மற்றும் இடது சாரி கட்சிகள். எங்களை விமர்சிப்பது மற்றும் அவதூறு செய்வதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்?. இதனால் வி.சி.க. மற்றும் இடதுசாரிகளை விமர்சிப்பதன் மூலம் திமுக-வை பா.ஜ.க. பக்கம் இழுத்து செல்கின்றாரோ என்ற ஐயம் நிலவுகிறது. அந்த பின்னணியில்தான் விமர்சனம் செய்கிறார். அந்த பின்னணியில்தான் விமர்சிக்கிறாரே தவிர வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை.

இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com