

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விசிக மீது அதிக பாசம் வைத்திருந்தோம். அதிகம் பாசம் வைத்திருந்தவர்கள் மீது தான் கோபம் வரும்.
திமுக, விசிக இடையே இருப்பது சகோதர முரண்பாடு.
திருச்சியில் முதல்வர் என்ற தகுதியைக் குறைத்து பேசியுள்ளார் விஜய்.
திமுக, அதிமுகவின் மூன்றாம் கட்ட தலைவர்கள் கூட்டணி குறித்து பேசியிருக்கலாம்.
பிரதமர் மோடியிடம் CM விஜய் பேசியது என்ன?
CM விஜய் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்? செய்தியாளர்களைச் சந்திப்பது முதலமைச்சரின் கடமை.
முதல்வர் நாற்காலியை விஜய் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
திருவள்ளுவருக்கு காவி உடை - CM விஜய் எதிர்க்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.