90% தபால் வாக்குகள் அ.தி.மு.கவுக்கே..!- சேலம் பிரசாரத்தில் அன்புமணி உறுதி

தமிழகத்தில் தீய திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அதிமுகவின் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும்.
90% தபால் வாக்குகள் அ.தி.மு.கவுக்கே..!- சேலம் பிரசாரத்தில்  அன்புமணி உறுதி
Published on

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக கூட்டணிக்கு சாதகமாக தான் திமுக கூட்டணியில் உள்ள பிரேமலதா வேலை செய்து கொண்டிருக்கிறார்.

தபால் வாக்கு செலுத்திய 90 சதவீதம் பேர் அதிமுகவுக்கு வாக்களித்திருப்பதாக தவெலக வெளியாகி உள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் எனவும் பிரேமலதா பேசியுள்ளார்.

தமிழகத்தில் தீய திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அதிமுகவின் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும்.

இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள், குழந்தைகளை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

திமுகவின் தோல்விகளும் துரோகங்களும் மோசடிகளும் உலக வரைபடத்தின் பரப்பளவை விட நீளமானவை.

தாய்மார்களே, பெண்களே, பெற்றோர்களே திமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள். ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு போட கூடாது என தாய்மார்களின் பாதம் தொட்டு கேட்கிறேன்.

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத திமுக ஆட்சியை தூக்கி வீசுங்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com