

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, பெயர் சேர்க்கக் கோரி இதுவரை 6.48 லட்சம் (6,48,285) பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 23ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து நேற்றுவரை இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான ஏப்ரல் 6 அன்று துணை வாக்காளர் பட்டியல் தயாராகும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்தல் அல்லது இரட்டைப் பதிவுகள் போன்ற காரணங்களால், முந்தைய பட்டியலில் இருந்து சுமார் 74 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இறுதி வாக்காளர் பட்டியலின்படி தற்போது தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடி ஆகும்.
தமிழ்நாட்டில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. மே.4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.