சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் 49 மின்சார ரெயில்கள் ரத்து!- எந்தெந்த தேதிகளில் தெரியுமா?

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் வழித்தடத்தில் 7 மின்சார ரெயில்களும் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
மின்சார ரெயில்
Published on

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மின்சார மற்றும் பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 27-ந்தேதி 27 மின்சார மற்றும் பயணிகள் ரெயிலும், 28-ந்தேதி 22 மின்சார மற்றும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சில ரெயில்கள் பகுதி நேர ரத்தும் செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

27-ந்தேதி ரத்து

* அரக்கோணத்தில் இருந்து வருகிற 27-ந்தேதி காலை 7.20, மதியம் 2.50 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வேலூர் செல்லும் பயணிகள் ரெயில்களும், அதிகாலை 4, 5, காலை 6.25 ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில்களும், காலை 6.50 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில்களும், மாலை 6, இரவு 7 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில்களும், காலை 5.50, மாலை 6.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்களும், காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருச்சானூர் செல்லும் பயணிகள் ரெயிலும், இரவு 9 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

* மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7, இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில்களும், காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருச்சானூர் செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

* திருத்தணியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும், காலை 8.50 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் பயணிகள் ரெயிலும், இரவு 9.15, 11.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

* காட்பாடியில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயிலும், வேலூரில் இருந்து காலை 10, மாலை 5.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

* திருச்சானூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் பயணிகள் ரெயிலும், திருச்சானூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயிலும், செங்கல்பட்டில் இருந்து காலை 8.20, இரவு 8.25 ஆகிய ரேநங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

28-ந்தேதி ரத்து

* அரக்கோணத்தில் இருந்து வருகிற 28-ந்தேதி காலை 7.20, மதியம் 2.50 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வேலூர் செல்லும் பயணிகள் ரெயில்களும், காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயிலும், காலை 4, 5, 6.25 ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில்களும், காலை 6.50 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும், காலை 9.50 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும், காலை 5.50, மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

* திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரெயிலும், மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருச்சானூர் வரும் பயணிகள் ரெயிலும், திருச்சானூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் பயணிகள் ரெயிலும், வேலூரில் இருந்து காலை 10 மணிக்கும், திருப்பதியில் இருந்து மாலை 3.40 மணிக்கும், காட்பாடியில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கும், ஜோலார்பேட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கும், மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7 மணிக்கும் புறப்பட்டு அரக்கோணம் வரும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

* திருத்தணியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயிலும், செங்கல்பட்டில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி நேர ரத்து

இதேபோல, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் வருகிற 28-ந்தேதி மொத்தம் 41 மின்சார மற்றும் பயணிகள் ரெயில்களும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் வழித்தடத்தில் 7 மின்சார ரெயில்களும் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com