

இந்துசமய அறநிலையத் துறை சார்பாக வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்து சமய அறநிலைய துறையினரால் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இதில் நீதிமன்ற தடையாணை காரணமாகவும், கோவில்களின் நிதிச்சுமையினை கருத்தில் கொண்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தொடங்கப்படாத நிலையில் இருந்த ரூ.115 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டிலான 29 திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூ.130 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டிலான 17 வணிக வளாகங்கள் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பீட்டிலான 46 பணிகளுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிதியினை கொண்டு கோவில்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.