"நல்லவேளை என்னைத் தோற்கடித்து, தப்பித்தீர்கள்.. இல்லையென்றால்..!"– சீமான்

எங்களுக்கு வயிற்றுப்பசி இல்லை, வரலாற்றுப்பசி உண்டு..
"நல்லவேளை என்னைத் தோற்கடித்து, தப்பித்தீர்கள்.. இல்லையென்றால்..!"– சீமான்
Published on

செங்கல்பட்டு மறைமலை நகரில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்வில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆள் மாற்றம், அரசியல் மாற்றத்துக்கு வந்த அரசியல்வாதிகள் அல்ல நாம். முன்னோர்கள் அறம் சார்ந்த ஆட்சி செய்தனர்.

உயிரை இழக்கலாம் உரிமையை இழக்கலாமா? ஒற்றை மகன் என எண்ண வேண்டாம். லட்சக்கணக்கானவர்கள் என்னுடன் உள்ளனர். எங்களுக்கு வயிற்றுப்பசி இல்லை, வரலாற்றுப்பசி உண்டு; சோற்றுப்பசி அல்ல, வஞ்சகத்தின் பசி உள்ளது.

நல்ல வேளை என்னைத் தோற்கடித்து சட்டமன்றத்திற்குள் நுழையவிடாமல் செய்தீர்கள். நல்வாய்ப்பாக தப்பித்துவிட்டீர்கள். ஐந்தாரு பேரோடு சட்டமன்றத்திற்குள் நுழைந்திருந்தேன் என்றால் எல்லோரும் வெளியில்தான் நின்றிருப்பீர்கள்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com