TN Assembly Election | விஜய்யின் பிரமாண பத்திரத்தை 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம்

காணும் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
TN Assembly Election | விஜய்யின் பிரமாண பத்திரத்தை 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம்
Published on

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி பத்திரங்களைப் பார்ப்பதில் பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சொத்து மற்றும் பின்னணி விவரங்களை அறிந்துகொள்ள லட்சக்கணக்கானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://affidavit.cci.gov.in/ பக்கத்தில் அனைத்து வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஒரு வேட்பாளரின் சொத்துகள் விவரம், குற்ற வழக்குகள் நிலுவை குறித்த வெளிப்படையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் முதன் முறையாக களம் காணும் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது பிரமாண பத்திரத்தை மட்டும் இணையதளத்தில் இருந்து அதிகபட்சமாக சுமார் 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதிலும் இந்த எண்ணிக்கை சாதனை படைத்துள்ளது.

அவருக்கு அடுத்தப்படியாக மு.க.ஸ்டாலினின் பிரமாண பத்திரத்தை சுமார் 1.30 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com