

விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விடுமுறையை முடித்து காரில் வந்துகொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற ஓட்டுநர் திடீரென வாகனத்தை மெதுவாக இயக்கியதால் பின்னால் வந்த இரண்டு கார்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
கார் திடீரென தீ மளமளவென எரியத் தொடங்கியதால் 4 பேரும் உடனடியாக காரை விட்டு இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தது தீயை கட்டுப்படுத்தினர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.