நீலகிரியில் 27 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
நீலகிரியில் 27 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு
Published on

தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோவில், மசூதிகள் கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் நீலகிரி மாவட்டத்தில் 27 கடைகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் டிடிகே சாலையில் உள்ள எலைட் டாஸ்மாக் கடை மட்டுமல்லாமல் அருவங்காடு, கரும்பாலம் உள்ளிட்ட பல இடங்களில் 10 கடைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளும் அப்புறப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com