சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் செயல்படும் தீவிர சிகிச்சை பிரிவு- அடுத்த மாதம் திறப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்க வேண்டிய இந்த சிகிச்சை மையம் ஊழியர்கள் பற்றாக்குறையால் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அல்லது தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவார்கள்.
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் செயல்படும் தீவிர சிகிச்சை பிரிவு- அடுத்த மாதம் திறப்பு
Published on

சென்னை:

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உயிர் இழப்பை குறைப்பதற்காக மத்திய அரசு அவசர சிகிச்சை பிரிவு மையங்களை அமைக்க திட்டமிட்டது. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் எதிர்பாராமல் ஒன்றுக்கு பின் ஒன்றாகவும் நிற்கும் வாகனங்கள் மீது மோதியும் விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்குள் இறந்து விடுகின்றனர். இதுபோன்ற உயிர் இழப்பை குறைப்பதற்காக முதன் முதலாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவிலில் விபத்து கால அவசர சிகிச்சை பிரிவு தொடங்க முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்க வேண்டிய இந்த சிகிச்சை மையம் ஊழியர் கள் பற்றாக்குறையால் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது தமிழக அரசு இதற்காக பணியாளர்களை நியமித்து இருப்பதால் அடுத்த மாதம் தீவிர சிகிச்சை மையம் திறக்கப்படுகிறது.

இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும். 3 ஷிப்டு அடிப்படையில் 12 மருத்துவ நிபுணர்கள் செயல்படுவார்கள். விபத்தில் சிக்கும் நோயாளிகளுக்கு முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அல்லது தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவார்கள்.

இங்குள்ள மருத்துவ குழுவினர் ரத்த போக்கை கட்டுப்படுத்துதல், எலும்பு முறிவுகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்கள். இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 30 முதல் 60 நிமிடங்களுக்குள் நோயாளிகளை மாற்ற முடியும்.

மகேந்திரா சிட்டி மற்றும் சிங்கப் பெருமாள் கோவில் இடையிலான 4 கி.மீ. தூரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 விபத்துகள் நடப்பதாகவும், 6 வழிச் சாலையாக விரிவுப்படுத்தப்பட்டதில் இருந்து விபத்து விகிதம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் செல்லும் வாகனங்கள் நடைபாதையில் செல்பவர்களுக்கும் நெடுஞ்சாலையை கடப்பவர்களுக்கும் ஆபத்துகளை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com