2026 சட்டமன்ற தேர்தல் - பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட 18 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவித்தார் பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு
2026 சட்டமன்ற தேர்தல் - பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
Published on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாமகவிற்கு எந்தெந்த தொகுதிகள் என்பதையும் இன்று அறிவித்தார் கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

எந்தெந்த இடங்கள் என அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களிலேயே தங்கள் தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

பெரும்பாலும் வன்னியர் மக்கள் அதிகம் இருக்கும், பாமகவிற்கு அதிக ஆதரவு இருக்கும் வடமாவட்ட தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கீழ்வேளூர் தொகுதியில் வடிவேல் ராவணனும், சென்னை அம்பத்தூர் தொகுதியில் கே.என்.சேகா், செஞ்சியில் கணேஷ் குமாரும் பாமக தரப்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். விஜய் போட்டியிட உள்ளதாக கூறப்படும் பெரம்பூர் தொகுதியும் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com