2026 சட்டமன்ற தேர்தல் - தபால் வாக்கில் மாற்றம்!

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் - தபால் வாக்கில் மாற்றம்!
Published on

தேர்தல் நேரங்களில் பணி நிமித்தம் உள்ளிட்ட காரணங்களால் சொந்த தொகுதிகளில் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்காக தபால் வாக்குமுறை வசதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்த தபால் வாக்குமுறையில் மேலும் 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து காவல்துறை ஆகிய ஐந்து துறையும் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாக உள்ளன. தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com