என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திண்டிவனம் அருகே புதுவை மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
- காரை சோதனை செய்ததில் அதில் 864 புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதுவையில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையை ஒட்டி திண்டிவனம் அருகே உள்ள ஆத்தூர் டோல்கேட் அருகே விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜன் , சப்-இன்ஸ்பெக்டர் ஹினாயத் பாஷா,மற்றும் போலீசார் அதிவேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முற்பட்டனர் அப்பொழுது போலீசாரை இடிப்பது போல வேகமாக சென்ற காரை ஆத்தூர் டோல்கேட்டில் பேரிகார்டு வைத்து மடக்கினார்கள்.
காரை சோதனை செய்ததில் அதில் 864 புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புதுவையில் இருந்து சென்னைக்கு மது பாட்டில்கள் கடத்திய புதுவை ரெயின்போ நகரை சேர்ந்த கமல் என்கின்ற கமலநாதன் (45)புதுவை டி.வி.நகரை சேர்ந்த பாலாஜி (34)ஆகியோரை கைது செய்து மது பாட்டில்கள், காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






