TN Electons 2026 | தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 18 பெண்கள்: 2 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுப்பு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்
TN Electons 2026 | தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 18 பெண்கள்: 2 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுப்பு
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை இன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வேட்பாளர் பட்டியலில் 16 பெண்கள் இடம் பிடித்துள்ளனர். பட்டம் படித்தவர்கள் 125 பேர் ஆவார்கள். இதில் 15 பேர் டாக்டர்கள் ஆவார்கள். 7 பேர் முனைவர் ஆவார்கள்.

அத்துடன் இரண்டு அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கயல்விழி செல்வராஜின் தாராபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் டாக்டர். இந்திராணி போட்டியிடுகிறார். மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com