

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை விடுமுறை, சுபமுகூர்த்தம், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14-ந் தேதி (நாளை) வியாழக்கிழமை அன்று 80 பஸ்களும், 15-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று 620 பஸ்களும், 16-ந் தேதி சனிக்கிழமை அன்று 655 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 15 மற்றும் 16-ந்தேதிகளில் 120 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 15 மற்றும் 16-ந் தேதிகளில் 25 பஸ்களும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.