தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு

உணவு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளராக அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு
Published on

தமிழ்நாட்டில் 17 IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, சத்ய பிரதா சாகு, அமுதா உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையராக சமீரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக ககன் தீப் பேடி நியனம் செய்யப்பட்டு உள்ளார்.

நீர்வளத்துறை முதன்மை செயலாளராக சத்ய பிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உணவு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளராக அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மின்சாரத்துறை செயலாளராக அனில் மேஷ்ராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுப்பணித்துறை செயலாளராக ஷூன்சோங்னாம் ஜடக் சிரு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக கே.எஸ்.பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை செயலாளராக வள்ளலார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை செயலாளராக தக்ஷிணாமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராக சஞ்ஞன் சிங் சவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக ஆர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக ராகுல் நாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குனராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமனம்.

X

Maalai Malar
www.maalaimalar.com