தமிழ்நாட்டில் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்..

சென்னை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகரங்களுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம்!
Tamilnadu Government
Published on

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பலப்படுத்தவும் நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்தம் வகையில் காவல் துறையில் 14 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, சென்னை காவல் துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக ஆயுஷ் மானி திவாரியும், மதுரை மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன் ஐபிஎஸ், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக கபில்குமார் சரத்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடலோர பாதுகாப்பு குழும ஐஜியாக பிரவேஷ் குமார் ஐபிஎஸ், திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ராஜேஸ்வரி ஐபிஎஸ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அனில்குமார் கிரி மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஐஜியாக கார்த்திகேயன் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் காவல் ஆணையராக (போக்குவரத்து) சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் காவல் ஆணையராக (தலைமையகம்) ஏ.ஜி. பாபு ஐபிஎஸ், மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையராக ஜோஷி நிர்மல் குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக தேன்மொழி ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக மகேஸ்வரி ஐபிஎஸ், சென்னை நிர்வாகப் பிரிவு ஐஜியாக ராதிகா ஐபிஎஸ், மற்றும் சென்னை பணியாளர் பிரிவு ஐஜியாக துரைக்குமார் ஐபிஎஸ் ஆகியோரை நியமிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com