10-ம் வகுப்பில் வெற்றியை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு எப்போது?

மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். 96.47 சதவீதம் மாணவிகளும், 92.15 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பில் வெற்றியை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு எப்போது?
Published on: 

2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரர் ராஜ்மோகன் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

தமிழகத்தில் 12,467 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 87.06 லட்சம் மாணவர்களில் 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பொதுத்தேர்வில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். 96.47 சதவீதம் மாணவிகளும், 92.15 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பொதுத்தேர்வில் வெற்றி பெற இயலாதவர்களுக்கு மறுதேர்வு ஜூலை 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் 22-ந்தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com