‘10,000 புதிய பேருந்துகள், 5000 கோயில்களுக்கு குடமுழுக்கு, மூன்றாம் பாலினத்தவருக்கு விருது’ - திமுக தேர்தல் வாக்குறுதிகள்!

2026 தேர்தலுக்கான திமுக தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
‘10,000 புதிய பேருந்துகள், 5000 கோயில்களுக்கு குடமுழுக்கு, மூன்றாம் பாலினத்தவருக்கு விருது’ - திமுக தேர்தல் வாக்குறுதிகள்!
Published on

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அப்போது 2021-ல் கதாநாயகனாக இருந்த தேர்தல் அறிக்கை, இந்த முறை சூப்பர் ஸ்டாராக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

524 வாக்குறுதிகள் கொண்ட திமுக தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ள நிலையில் அவற்றில் முக்கியமானவற்றை காண்போம்.

  • உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும்வகையில் நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1,500 மாத உதவித்தொகையோடு 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.

  • புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 2030 ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காங்கள் நகரங்களிலும், தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.

  • ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்படும், அதன்மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

  • ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம்பிடிக்கும் வகையில் திராவிட மாடலின் செயல்பாடுகள் அமையும்.

  • தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடியிலிருந்து 5 லட்சம் கோடியாக, இரண்டு மடங்கு ஆக்கப்படும்.

  • 5 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும். ஆயிரம் கிராம தெய்வத் திருக்கோயில்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

  • சிறுபான்மையினர் தொழில் தொடங்க டேம்கோ மூலம் கடன்பெறும் உச்சவரம்பு அளவு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.

  • அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்கும் வசதியோடு தரம்வாய்ந்த விளையாட்டு விடுதிகள் கட்டப்படும்.

  • மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீட்டுவசதி, சமூக பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, வங்கிக்கடன் உள்ளிட்ட உதவிகள் கிடைக்க தாயுமானவர் திட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

  • கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் 15 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சீர் செய்யப்படும்.

  • அனைத்து மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள் அமைக்கபடும்.

  • திருச்சி, மதுரை, கோவை, சேலம் மாநகராட்சிகளின் அருகில் நவீன உலகத்தர வசதிகளோடு புதிய நகரங்கள் உருவாக்கப்படும்.

  • அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.

  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வித்தொகை உயர்த்தப்படும்.

  • மொழிப்போராட்ட வரலாற்றை இளைஞர் தலைமுறையினர் அறிய நவீன நூலக வசதியோடு கூடிய காட்சிக்கூடம் பொள்ளாட்சியில் அமைக்கப்படும்.

  • நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டராக உயர்த்தப்படும்.

  • தொழிற்சாலை அதிகமுள்ள நகரங்களில் பெண்கள் வேலைக்கு செல்ல எளிதாக்கும் பொருட்டு, குழந்தைகள் காப்பகம் 1000 உருவாக்கப்படும்.

  • பல்வேறு துறைகளில் சிறப்புற பணியாற்றும் திருநர், திருநங்கைகளுக்கு விருது வழங்கப்படும்.

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் இல்லா நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் தொழில்தொடங்க டாப்செட்கோ மூலம் கடன்பெறும் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.

Attachment
DOC
DMK Manifesto 2026.docx
Download

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com