‘புது மணப்பெண்களுக்கு 1 கிலோ வைரம், விரும்பும் நாடுகளுக்கு தேனிலவு பயணம்’ - சீமான் வாக்குறுதி

சிவகங்கையில் இன்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
‘புது மணப்பெண்களுக்கு 1 கி வைரம், விரும்பும் நாடுகளுக்கு தேனிலவு பயணம்’  - சீமான் வாக்குறுதி
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சிறிதுநேரம் கிண்டலாக தனது மனதில் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர்,

“நான் 15 ஆண்டுகளாக காதலித்து கத்திக் கொண்டிருக்கிறேன். என் காதல் புரிந்துவிட்டால் நான் வென்றுவிடுவேன். நான் நீண்ட நாட்களாக ஒருதலை காதலாகவே சென்றுக் கொண்டிருக்கிறேன். இந்த மக்கள் என்னை கண்டுகொள்வதில்லை.

நானும் மற்ற அரசியல் கட்சியினரைப் போலவே ஏமாற்றலாம் என யோசிக்கிறேன். ஆனால் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. அவர்கள் ரூ.2,000 தருகிறோம் எனக் கூறுகிறார். நான் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருகிறேன். (கூட்டத்தில் இருப்பவர்கள் சிரிக்க) அவர்கள் சொன்னால் நம்புகிறார்கள், நான் சொன்னால் சிரிக்கிறார்கள்.

ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் ஒரு கிலோ தங்கம், புதிதாக திருமணமான பெண்களுக்கு ஒரு கிலோ வைரமும், விரும்பிய நாட்டுக்கு தேனிலவு செல்ல ஏற்பாடும் செய்யப்படும். வேறு ஏதேனும் வேண்டுமா? என சிரித்துக்கொண்டே கலகலப்பாக பேசினார்.

தொடர்ந்து, திருந்துகள். இதுபோன்ற இலவசங்களை நம்பாதீர்கள். வீட்டிற்கு இரண்டு பேருக்கு அரசுவேலை தருகிறேன். ஒரு வட இந்தியர்களும் இங்கு இருக்கமாட்டார்கள். படிப்புக்கேற்ற வேலை, திறன் மேம்பாடு என அனைத்தையும் நான் செய்வேன்.

மது காய்ச்சப்பட்டாது, விற்கப்படாது. அதற்கு பதில் பனம்பால், தென்னம்பால் போன்றவை விற்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com