ஹெட்மயர், பண்ட் போராட்டம் வீண் - டெல்லியை ஒரு ரன்னில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ஆர்சிபி

கடைசி ஓவரை சிராஜ் சிறப்பாக பந்து வீச டெல்லியை ஒரு ரன்னில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
வெற்றிக் களிப்பில் ஆர்சிபி அணி
வெற்றிக் களிப்பில் ஆர்சிபி அணி
Published on

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 12 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 17 ரன்னிலும் வெளியேறினர். மேக்ஸ்வெல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

3-வது வீரராக களமிறங்கிய ராஜத் படிதார் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர்  6 ரன்னில் வெளியேறினார்.

கடைசி வரை நின்று அதிரடி காட்டிய ஏபி டி வில்லியர்ஸ் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்தார்.

இறுதியில், ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா, ரபடா, அவேஷ் கான், அமித் மிஷ்ரா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா ஒரு  விக்கெட் வீழ்த்தினர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா 21 ரன்னும், ஷிகர் தவான் 6 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னும், ஸ்டோய்னிஸ் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாக ஆடினார். அவருக்கு ஹெட்மயர் ஒத்துழைப்பு கொடுத்தார்.
கடைசி 4 ஓவரில் 56 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயர் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் 23 பந்தில் அரை சதமடித்தார்.

இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் 53 ரன்களும், பண்ட் அரை சதமடித்து 58 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com