மாரியப்பன் தங்வேலுவுக்கு அரசு வேலை- பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர்

தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மாரியப்பன் தங்வேலுவுக்கு பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர்
மாரியப்பன் தங்வேலுவுக்கு பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர்
Published on

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம், பெரியவடக்கம்பட்டி கிராமத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரரான தங்கவேலு மாரியப்பன் ஆண்களுக்கான சர்வதேச உயரம் தாண்டும் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக பங்கேற்று ரியோ, பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் 2016ல் தங்கப்பதக்கமும், இந்தோனேசியாவில் நடைபெற்ற 3-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கமும், துபாயில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2019ல் வெண்கல பதக்கமும், டோக்கியோ, ஜப்பானில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் 2020-ல் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

பட்டதாரியான தங்கவேலு மாரியப்பன், தற்போது பெங்களூருவில் உள்ள ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் முதுநிலை பயிற்சியாளராக (தடகளம்) பணிபுரிந்து வருகிறார்.

நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாராலிம்பிக்ஸ் விளையாட்டுச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. கிருபாகரராஜ், பொதுச் செயலாளர் கே.ஜி. மெர்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com