நவம்பர் 8-ம் தேதி வரை 144 தடை உத்தரவு - லக்னோ போலீசார் அறிவிப்பு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உ.பி.யின் லக்னோ நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லக்னோ போலீஸ் நிலையம்
லக்னோ போலீஸ் நிலையம்
Published on

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், லக்னோ நகரில் வரும் நவம்பர் 8-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லக்னோ போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் நாட்களில் நடைபெறவுள்ள திருவிழாக்கள், பல்வேறு நுழைவு தேர்வுகள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றை முன்னிட்டு கொரோனா விதிகளைப் பின்பற்றும் வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com