முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு கொரோனா- மனைவிக்கும் பாதிப்பு

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அவரது மனைவி சென்னம்மா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேவேகவுடா
தேவேகவுடா
Published on

பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு 87 வயதாகிறது. இதன் காரணமாக அரசியலில் தீவிரம் காட்டாமல் பெங்களூரு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரே டுவிட்டரில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘எனக்கும், எனது மனைவி சென்னம்மாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே நாங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி எங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

சமீப காலங்களில் எங்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் தொண்டர்களும், எனது நலன்விரும்பிகளும் பயப்பட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

தற்போது நாட்டில் கொரோனா 2-வது அலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் அலை ஏற்பட்ட போது பல அரசியல் தலைவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. அதேபோல் இப்போது 2-வது அலையிலும் பல அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com