தென்காசி மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்று புதிதாக 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் 13 பேர், தென்காசியில் 10 பேர், செங்கோட்டையில் 5 பேர், கடையத்தில் 4 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

கீழப்பாவூரில் 2 பேர், குருவிகுளத்தில் 2 பேர், கடையநல்லூரில் 2 பேர், மேலநீலிதநல்லூரில் 2 பேர், வாசுதேவநல்லூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 8,971 ஆக உயர்ந்தது. நோய் பாதிப்பில் இருந்து நேற்று 24 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 161 பேர் இறந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி 266 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com