செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 86 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 86 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 675 ஆக உயர்ந்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 86 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 675 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 46 ஆயிரத்து 408 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 715 ஆக உயர்ந்தது. 552 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 ஆயிரத்து 879 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 484 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 654 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 423 பேர் உயிரிழந்துள்ளனர்.

281 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com