தடுப்பூசி போட ‘வாட்ஸ் அப்’பில் முன்பதிவு: மத்திய அரசு ஏற்பாடு

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ‘கோவின்’ வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது.
வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்
Published on

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ‘கோவின்’ வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வாட்ஸ் அப்பில் ‘Book Slot’ என்று டைப் செய்து மைகவ் இந்தியா கொரோனா உதவிமைய எண்ணான 91-9013151515 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அப்போது பெறப்படும் ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும். பின்னர், அடுத்தடுத்து கூறப்படும் வழிகாட்டுதல்படி, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நேரத்தை முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com