அரியலூரில் மேலும் 6 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,605 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களில் தலா ஒருவருக்கும், அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2 பேருக்கும் என மொத்தம் 6 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,605 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 68 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 4,489 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 588 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே மாவட்டத்தில் 2,247 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,223 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 3 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 388 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com