search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிவகாசி அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி- டிரைவர் உள்பட 5 பேர் உயிர் தப்பினர்
    X

    தீ விபத்தில் சேதமடைந்த லாரி.

    சிவகாசி அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி- டிரைவர் உள்பட 5 பேர் உயிர் தப்பினர்

    • சிப்பிப்பாறை பெட்ரோல் பங்க்கில் இன்று அதிகாலை டிரைவர் விஜய் லாரியை நிறுத்தி டீசல் நிரப்பினார்.
    • வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சிவகாசி:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் விஜய் (வயது 45), லாரி டிரைவர். இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கட்டிட பணிக்காக பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரியில் புறப்பட்டார்.

    சிவகாசி அருகே உள்ள சிப்பிப்பாறை பெட்ரோல் பங்க்கில் இன்று அதிகாலை டிரைவர் விஜய் லாரியை நிறுத்தி டீசல் நிரப்பினார். பின்னர் லாரி எடுத்து சிறிது தூரம் சென்றபோது திடீரென எஞ்சின் பகுதியில் இருந்து கரும்புகை வந்து தீ பிடித்தது.

    இதை பார்த்த டிரைவர் விஜய் மற்றும் லாரியில் இருந்த தொழிலாளர்கள் 4 பேர் குதித்து வெளியேறினர். இந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி லாரி முழுவதும் எரிய தொடங்கியது. அந்த பகுதி மக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் பலனில்லை.

    இதையடுத்து வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டி மற்றும் வீரர்கள் சம்பவ இடம் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. ஆனாலும் லாரியில் 70 சதவீத பகுதிகள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

    தீ விபத்து நடந்த இடத்தை மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாரியில் இருந்து புகை வந்ததும் டிரைவர் உள்ளிட்ட 5 பேரும் குதித்து வெளியேறியதால் காயமின்றி உயிர் தப்பினர்.

    Next Story
    ×