search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காங்கயம் அருகே சரக்கு வேன்-லாரி மோதி விபத்து: 5 பேர் பலி
    X

    விபத்துக்குள்ளான சரக்கு வேன் கவிழ்ந்து கிடப்பதை காணலாம்.

    காங்கயம் அருகே சரக்கு வேன்-லாரி மோதி விபத்து: 5 பேர் பலி

    • விபத்து நடந்த பகுதியை காங்கயம் டி.எஸ்.பி. பார்த்திபன் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
    • இறந்தவருக்கு திதி கொடுத்து விட்டு திரும்பியபோது விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பாப்பினி பச்சாப்பாளையத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து திதி கொடுப்பதற்காக அவரது உறவினர்கள் 40க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றுக்கு சரக்கு வேனில் சென்றனர்.

    அங்கு திதி கொடுத்து விட்டு பச்சாப்பாளையத்திற்கு சரக்கு வேனில் புறப்பட்டனர். அதனை நத்தகாட்டுவலசு கலைஞர் காலனி பகுதியை சேர்ந்த அருண்குமார் (32) ஓட்டினார்.

    இன்று காலை 11 மணியளவில் காங்கயம்-முத்தூர் இடையே வாலிபனங்காடு பகுதியில் வரும்போது அந்த வழியாக பிளைவுட்ஸ் ஏற்றி வந்த லாரியும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 வாகனங்களும் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த 40 பேர் காயமடைந்தனர். லாரி டிரைவர்-கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி காங்கயம் பாப்பினி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகள் தமிழரசி (வயது 17), நாச்சிமுத்து என்பவரின் மனைவி சரோஜா (61), கிட்டுச்சாமி (45), பூங்கொடி (62) உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சைக்காக 15 பேர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து நடந்த பகுதியை காங்கயம் டி.எஸ்.பி. பார்த்திபன் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்தவருக்கு திதி கொடுத்து விட்டு திரும்பியபோது விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் காங்கயம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×