என் மலர்

  தமிழ்நாடு

  போட்டு தாக்கிய திருமா- பதிலடி கொடுத்த சீமான்!
  X

  போட்டு தாக்கிய திருமா- பதிலடி கொடுத்த சீமான்!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காங்கிரஸ், தி.மு.க.வுக்கு நிகரான வாக்கு வங்கி இல்லாவிட்டாலும் அவர்களோடு சேர வேண்டும்.
  • தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை நான் எதிர்கொள்ள தயாரில்லை.

  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பார்த்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்...

  எனக்கு தி.மு.க.வும் வேண்டாம்... அ.தி.மு.க.வும் வேண்டாம். காங்கிரசும் வேண்டாம். பி.ஜே.பி.யும் வேண்டாம். இப்படி எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னத்தை சாதிக்க போகிறீர்கள்? இதைவிட முட்டாள்தனமான முடிவு வேறெதுவும் இருக்காது.

  எங்களுக்கும் எல்லா கட்சிகளோடும் முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நாங்கள் ஏன் சேருகிறோம்? பகைவர் பலர் இருக்கலாம் அதில் முதலில் காலி செய்ய வேண்டியது யாரை என்பதை பார்க்க வேண்டும்.

  இப்போது சனாதன தர்மத்தை தலைதூக்கவிடக்கூடாது. 2024 தேர்தலில் பி.ஜே.பி.யை ஜெயிக்க விடக்கூடாது. அதற்காக பிடிக்காவிட்டாலும் நாமெல்லாம் ஒன்றுசேர வேண்டும். நமக்குள் இருக்கும் பகையை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

  காங்கிரஸ், தி.மு.க.வுக்கு நிகரான வாக்கு வங்கி இல்லாவிட்டாலும் அவர்களோடு சேர வேண்டும். ஒரு ஏழே முக்கால் கிராம் தங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நாமும் கால் கிராம் சேர்ந்தால்தான் ஒரு சவரன் ஆக முடியும்.

  அண்ணன் சொல்றது சரிதான். அதை நான் ஏற்கவில்லை. ஆனால் அண்ணன் ஏற்கனவே சொன்னது மறந்துவிடவில்லை. 4 சீட்டுக்கு நடையாய் நடக்க வேண்டியுள்ளது. மண்டியிட வேண்டியுள்ளது, கெஞ்ச வேண்டியுள்ளது என்றீர்களே? அண்ணன் பட்ட அந்த அசிங்கத்தை நானும் படணுமா?

  அவரால் முடியாது என்றால் இருக்கட்டும். தம்பி நான் போராடி பார்க்கிறேன். கெஜ்ரிவால் பஞ்சாபிலும், டெல்லியிலும் போராடி வெற்றி பெறவில்லையா? வெற்றி பெற முடியாது என்று சொல்லக்கூடாது. தம்பியாலும் முடியும். தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை நான் எதிர்கொள்ள தயாரில்லை.

  நான் இப்பவே சொல்கிறேன். 2024 தேர்தலிலும் தனித்துதான் நிற்பேன். 2026 தேர்தலிலும் தனித்துதான் நிற்பேன்.

  Next Story
  ×