திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவிலில் டி.டி.வி. தினகரன் குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருப்பணி வேலைகளுக்கு உதவுமாறு கோவில் பக்தர்கள் டி.டி.வி. தினகரனிடம் கோரிக்கை விடுத்தனர்.அமமுக செயலாளர் ஆடிட்டர் சுந்தர மூர்த்தியை அழைத்தார். அவரிடம் கோவில் முகப்பு கோபுரத்தை சொந்த செலவில் கட்டித்தருவதாக உறுதியளித்தார்.
திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவிலில் டி.டி.வி. தினகரன் குடும்பத்துடன் சாமி தரிசனம்
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளம் திருத்துறையூர் கிராமத்தில் சிஷ்ட குருநாதர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நேற்று மாலை சாயரட்சை பூஜை நடந்தது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றகழக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அவரது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் 1008 சகஸ்கர நாம அர்ச்சனை செய்தனர்.

முன்னதாக அவரை அ.ம.மு.க. நிர்வாகிகள், கோவில் நிர்வாகத்தினர், ஊர் பிரமுகர்கள், கோவில் அர்ச்சகர்கள் திரண்டு வந்து வரவேற்றனர். திருப்பணி வேலைகளுக்கு உதவுமாறு கோவில்பக்தர்கள் டி.டி.வி. தினகரனிடம் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அருகில் இருந்த கடலூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் ஆடிட்டர் சுந்தர மூர்த்தியை அழைத்தார். அவரிடம் கோவில் முகப்பு கோபுரத்தை சொந்த செலவில் கட்டித்தருவதாக உறுதியளித்தார். அதற்கான பூர்வாங்க பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஆடிட்டர் சுந்தர மூர்த்திடம் தெரிவித்தார்.

இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com