சங்கரன்கோவில் அருகே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை

திவ்யா பிளஸ்-2 முடித்து விட்டு சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த செவல்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சோமுதுரை. விவசாயி. இவருக்கு திவ்யா(வயது 17) என்ற மகள் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர்.

திவ்யா பிளஸ்-2 முடித்து விட்டு சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் 'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார். சில மாதங்களாக அங்கு தினமும் சென்று அவர் படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 15-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திவ்யா திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த அவரது பெற்றோர் திவ்யாவை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் அவர் பரிதாபமாக இறந்தார்.

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com