ரூ.6 ஆயிரம் பெற தகுதி இருந்தால் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கலாம்

ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை 500 ரூபாய் நோட்டுகளாக 12 வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
ரூ.6 ஆயிரம் பெற தகுதி இருந்தால் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை :

மழை வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ள நிலையில், வருமான வரி செலுத்துபவர்களில் நடுத்தர குடும்பமாக சிலர் இருந்தால் அவர்களும் தங்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் வேண்டும் என்று கருதினால் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி கொடுக்கலாம். இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதில் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்து எழுதி கொடுத்தால் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவரா? இல்லையா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை 500 ரூபாய் நோட்டுகளாக 12 வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com