search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாகர்கோவில் தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி சிலையை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    நாகர்கோவில் தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி சிலையை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • தி.மு.க. அலுவலகத்திற்குள் சென்ற நிர்வாகிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் தி.மு.க. அலுவலகத்தின் முன் பகுதியில் சாலையின் இருபுறமும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 6 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு அதன்மேல் 8½ அடி உயரத்தில் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி, மனோ தங்கராஜ் ஆகியோரும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த 25 அடி உயர கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார். பின்னர் கட்சி அலுவலகத்திற்குள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக விழாவிற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜே. ஸ்டாலின், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் புத்தகம், பொன்னாடை வழங்கி வரவேற்றனர்.

    கட்சி அலுவலகத்திற்குள் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள். கட்சி அலுவலகத்திற்குள் நிர்வாகிகள் 80 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து கருணாநிதியின் சிலையை தயார் செய்த மீஞ்சூரைச்சேர்ந்த தீனதயாளனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசையும், தங்க மோதிரத்தையும் வழங்கி கவுரவப்படுத்தினார். பின்னர் மேயர் மகேஷ் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தின் மாதிரி நினைவு பரிசை அவர் வழங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, தாமரை பாரதி, சதாசிவம் ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திரகுமார், மாநகரச் செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் வருகையையடுத்து அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது.

    தி.மு.க. அலுவலகத்திற்குள் சென்ற நிர்வாகிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் தி.மு.க. அலுவலகத்தின் முன் பகுதியில் சாலையின் இருபுறமும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது.

    Next Story
    ×