கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் மாதம் 1000 ரூபாய்... முதலமைச்சர் அறிவிப்பு

காலை உணவு திட்டத்தால் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.மாணவர்களை பார்க்கும்போது எனக்கு இளமை திரும்புகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் மாதம் 1000 ரூபாய்... முதலமைச்சர் அறிவிப்பு
Published on

சென்னை:

சென்னை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் 22,931 வகுப்பறைகளை தொடங்கி வைத்தார்.

அப்போது பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் அவர் கூறியதாவது:-

* காலை உணவு திட்டத்தால் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

* மாணவர்களை பார்க்கும்போது எனக்கு இளமை திரும்புகிறது.

* புதுமைப் பெண் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

* 'புதுமைப் பெண் திட்டம்' போல வரும் ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர்களுக்கு 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படும்.

* கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

* பள்ளிக்கல்வித்துறை உலக தரத்தில் கொண்டு செல்ல அமைச்சர் அன்பில் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com