பாரம்பரியம் மிக்க கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்- அண்ணாமலை

கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார்.மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.
பாரம்பரியம் மிக்க கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்- அண்ணாமலை
Published on

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசனை சந்தித்தார். அப்போது அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பாஜக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக இணைந்துள்ளது.

கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார்.

மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.

பாரம்பரியம் மிக்க கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் விலங்குகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com