கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி- மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்

மாதவன் பலியானது குறித்த தகவல் அம்பையில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி- மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
Published on

நாகர்கோவில்:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மாதவன் (வயது 18). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு அவர் வேலை பார்த்த ஓட்டலில் இருந்து சுங்கான்கடை பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று விட்டு மீண்டும் நாகர்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மாதவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மாதவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி மாதவன் பரிதாபமாக இறந்தார். மாதவன் பலியானது குறித்த தகவல் அம்பையில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கார் டிரைவர் முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது மாதவன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது தெரியவந்துள்ளது. பலியான மாதவனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com