இறுதி ஊர்வலங்கள் - விதிகளை வகுக்க உத்தரவு

பண்ருட்டியில் இறுதி ஊர்வலத்தில் சாலையில் வீசப்பட்ட மாலையால் இளைஞர் உயிரிழந்தார்.இறுதி ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்த விதிகள் வகுக்க கோரி அன்புச்செல்வன் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இறுதி ஊர்வலங்கள் - விதிகளை வகுக்க உத்தரவு
Published on

சென்னை:

பண்ருட்டியில் இறுதி ஊர்வலத்தில் சாலையில் வீசப்பட்ட மாலையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, இறுதி ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்த விதிகள் வகுக்க கோரி அன்புச்செல்வன் என்பவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இறுதி ஊர்வலங்கள் நடத்துவது தொடர்பாக விதிகளை வகுப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும் வழக்கு தொடர்பாக தமிழக அரசு, காவல் துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com