ஆம்பூர் அருகே குடோனில் தீ விபத்து- கார், ஆட்டோ எரிந்து நாசம்

தேவலாபுரம் துத்திப்பட்டு கூட்ரோடு அருகே இயேசு ராஜா என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் மற்றும் தோல் பொருள்கள் வைக்கும் குடோன் உள்ளது. ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் எரிந்த வாகனம்
தீ விபத்தில் எரிந்த வாகனம்
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேவலாபுரம் துத்திப்பட்டு கூட்ரோடு அருகே இயேசு ராஜா என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் மற்றும் தோல் பொருள்கள் வைக்கும் குடோன் உள்ளது. இங்கு இன்று காலை 8 மணி அளவில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.

இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அக்கம்பக்கம் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் ஒரு மணி நேரம் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீ விபத்தில் கார், லோடு ஆட்டோ எரிந்து நாசமானது. இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com