தொழில் போட்டியால் மெத்தனாலை கலந்து விற்ற சாராய வியாபாரிகள்- சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தகவல்

புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலை, சென்னை இளைய நம்பி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.6 பேரல்களில், 2 பேரல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 4 பேரல் மெத்தனாலை மீண்டும் சென்னைக்கு அனுப்பி உள்ளதும் தெரியவந்துள்ளது.
தொழில் போட்டியால் மெத்தனாலை கலந்து விற்ற சாராய வியாபாரிகள்- சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தகவல்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.

இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலை, சென்னை இளைய நம்பி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையில் சென்னையை சேர்ந்த கெமிக்கல் தொழிற்சாலை அதிபரான இளைய நம்பி, தொழிற்சாலை மூடப்பட்டதால் அவரிடம் தேங்கி இருந்த மெத்தனால் என்ற விஷத் தன்மை வாய்ந்த வேதிப் பொருளை புதுச்சேரியை சேர்ந்த சாராய வியாபாரியான ஏழுமலையிடம் விற்பனைக்கு அனுப்பி உள்ளார்.

6 பேரல் மெத்தனாலை வாங்கிய ஏழுமலை புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா மூலம் மரக்காணம் சாராய வியாபாரிகளான அமரன், முத்து உள்ளிட்டோருக்கு குறைந்த விலைக்கு 200 லிட்டர் விற்றுள்ளார். வழக்கமாக புதுச்சேரி சாராயத்தை வாங்கி பாக்கெட் செய்து விற்று வரும் மரக்காணம் சாராய வியாபாரிகள் போட்டி காரணமாக அதிக போதை தரும் என்பதால், சாராயத்துடன் மெத்தனால் சேர்த்து, கடந்த 13-ந் தேதி மாலை விற்பனை செய்துள்ளனர். இதனால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

6 பேரல்களில், 2 பேரல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 4 பேரல் மெத்தனாலை மீண்டும் சென்னைக்கு அனுப்பி உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 12-வது நபரான மதனை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை முடிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com