அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் - முக ஸ்டாலின்

தமிழக சட்டசபையில் அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அணை பாதுகாப்பு சட்ட மசோதா தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பாதுகாப்பு என்ற பெயரில் அணைகளை அபகரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. எனவே, இந்த மசோதாவுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல. இந்த மசோதாவை திரும்பப் பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம். நான்கு அணைகள் மீதான தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட தமிழக அரசு குரல் கொடுக்கும். அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தும் என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com