இலங்கை பிரதமர் ரணில் நாளை இந்தியா வருகிறார்: 4 நாட்கள் சுற்றுப்பயணம்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாளை முதல் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் நாளை இந்தியா வருகிறார்: 4 நாட்கள் சுற்றுப்பயணம்
Published on

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 4 நாள் பயணமாக நாளை இந்தியாவிற்கு வருகிறார். இலங்கையில் இருந்து நாளை புறப்படும் அவர் பெங்களூர் வரும் அவர் அங்கிருந்து டெல்லிக்கு வர உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின்போது வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இலங்கையை சற்றியுள்ள கடற்பரப்பில் கடற்படையை வலிமைப்படுத்தும் சீனாவின் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்படும் என தெரிகிறது.

அதன்பின்னர் 5-வது சர்வதேச சைபர் விண்வெளி மாநாட்டில் ரணில் கலந்துகொள்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளார். தனது 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு  வெள்ளிக்கிழமை இலங்கை புறப்படுகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com