சிறந்த கேப்டன் டோனியா? ரோகித் சர்மாவா? துபே அளித்த நச் பதில்

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஷிவம் துபே காயம் காரணமாக விலகினார்.அவருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் இடம் பிடித்துள்ளார்.
சிறந்த கேப்டன் டோனியா? ரோகித் சர்மாவா? துபே அளித்த நச் பதில்
Published on

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் மிகவும் பிரபல தனியார் பேட்டி நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஷிவம் துபே, அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அப்போது இவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் ஷிவம் துபேவிடம் யார் சிறந்த கேப்டன் டோனியா? ரோகித் சர்மா என கேட்கப்பட்டது. உடனே அனைவரும் அருமையான கேள்வி என சிரித்தனர். இதற்கு என்ன பதில் அளிக்கப்போகிறார் என ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர்.

உடனே துபே, சிஎஸ்கே அணியில் டோனி சிறந்த கேப்டன் இந்திய அணியில் ரோகித் சிறந்த கேப்டன் என கூறினார். உடனே ரோகித் சர்மா அருமையான பதில் என்பது போல சைகை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com