உலக கோப்பை கனவு அணியில் ரோகித் சர்மா, பும்ரா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கனவு அணியில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ரோகித்சர்மா - பும்ரா
ரோகித்சர்மா - பும்ரா
Published on

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நடந்தது. இந்த போட்டியில் வீரர்களின் செயல்பாடுகளை வைத்து உலக கோப்பை கனவு லெவன் அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தேர்வு செய்து நேற்று அறிவித்தது.

அரையிறுதியில் தோல்வி கண்ட இந்திய அணியில் இருந்து ரன் குவிப்பில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா (5 சதம் உள்பட 648 ரன்கள்), வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (18 விக்கெட்) ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. கேப்டன் விராட்கோலிக்கு இடம் கிடைக்கவில்லை. அரையிறுதியில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த 2 வீரர்களுக்கு இடம் கிடைத்து இருக்கிறது. லீக் சுற்றுடன் வெளியேறிய வங்காளதேச அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் ( 2 சதம் உள்பட 606 ரன்கள், 11 விக்கெட்) இடம் பிடித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கனவு அணி வீரர்கள் வருமாறு:-

ஜாசன் ராய் (இங்கிலாந்து), ரோகித் சர்மா (இந்தியா), கேன் வில்லியம்சன் (கேப்டன், நியூசிலாந்து), ஜோரூட் (இங்கிலாந்து), ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர், ஆஸ்திரேலியா), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து), பெர்குசன் (நியூசிலாந்து), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா).

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com