மோடிக்கு காங். எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மோடிக்கு காங். எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த மாதம் 29-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து முடிந்ததையடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் முக்கிய மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் பிரதமர் மோடி நேற்று பேசும்போது காங்கிரஸ்  எம்.பி. ரேணுகா சவுத்ரியை விமர்சித்தார். இந்த விவகாரத்தை இன்று கையில் எடுத்த காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநிலங்களவையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

இதனால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதனால் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com