

கோவை:
கோவை ராஜவீதியில் தேர்நிலை திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. அதன் பிறகு ஆட்சி கவிழும். அ.தி.மு.க.- தி.மு.க. உள்ளிட்ட திராவிட கட்சிகளின் அத்தியாயம் முடிவுக்கு வரும்.
இந்து மக்கள் கட்சி நடிகர் ரஜினிகாந்தை முன்னிலைப் படுத்தி திராவிட இயக்கங்கள் இல்லாத புதிய அரசை தமிழகத்தில் ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.