"கொண்டாடும் வகையில் மூன்றாண்டுகளில் என்ன செய்தீர்கள்?” - பா.ஜ.க.வை சாடும் ராகுல் காந்தி

மோடி பிரதமராக பதவியேற்று மூன்றாண்டுகள் நெருங்குவதையொட்டி அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ”கொண்டாடும் வகையில் என்ன செய்தீர்கள்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
"கொண்டாடும் வகையில் மூன்றாண்டுகளில் என்ன செய்தீர்கள்?” - பா.ஜ.க.வை சாடும் ராகுல் காந்தி
Published on

மத்தியில் பா.ஜ.க அரசின் சார்பில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடையவுள்ளன. இதனை அக்கட்சியினர் ” மோடி ஃபெஸ்ட்” என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். பா.ஜ.க.வினரின் இந்த கொண்டாட்டங்களுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி ,” மூன்று ஆண்டுகளில் எந்த செயல்பாடுகளுமின்றி பொய்யான வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளீர்கள். எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழக்கின்றனர், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர், இளைஞர்கள் வேலைவாய்பின்றி இருக்கின்றனர். இதற்கிடையில் என்ன கொண்டாட போகிறீர்கள்? “ என காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com